Pages

26 February 2012

கற்றது கைமண் அளவு- 26/02/2012

இந்த பகுதியில் நான் விரும்பிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் தான்...

வாசிப்பு என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. சென்ற‌ வாரம் கொஞ்சம் UK-ன் வடக்கு தெற்காக பயணப்பட வேண்டிய நிர்பந்தம். அயல் சினிமா (எஸ்.இராமகிருக்ஷ்ணன்) என்கிற கட்டுரை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. நல்ல தொகுப்பு. நண்பர்கள் தரைவிறக்கம் செய்து படிக்கலாம். Google ஆண்டவரை கேளுங்கள்.....
*********************************************************************************


அறிவியல் எப்போது இப்போது போன்று அதிவேக பாய்ச்சலுக்கு ஆளானது, நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் விளக்க அறிவியலில் இடம் உண்டா என்ன ?. கடவுள் என்பது வெறும் கருத்தாக்கம் மட்டும் தானா ? இல்லை. அறிவியலால் விளக்க முடியாத வெற்றுக் கற்பனையா ? எனக்கு ஒரே குழப்பம் எப்போதும். ஒரு அறிவியலானாக என்னால் வெற்றுக் கற்பனை என்று ஒதுக்க முடியவில்லை. மின் காந்த துகள்களின் இருப்பு பற்றிய கண்டுபிடிப்பு தான் உலக தகவல் தொடர்பினை இன்றய உயரத்துக்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை. வரும் காலங்களில்
நாம் அனைவரும் தொடர்பு கொள்ள இப்போது நாம் பயன்படுத்தும் எதுவும் இன்றி நமக்குள், நம் முனிவர்கள், சித்தர்கள் செய்தது போல......


********************************************************************************இங்கிலாந்தின் Derbyshire ல் உள்ள Peak District மிகவும் அருமையான drive களில் ஒன்று. நேற்று நண்பர்களுடன் செல்ல நேர்ந்தது. இதன் வீடியோ இங்கே....( இது நாங்கள் எடுத்தது அல்ல)....


*******************************************************************************

எப்போதும் எப்படி எல்லாம் திருமணத்தை நடத்திக் கொள்ளவேண்டும் என்கிற கனவு ஒவ்வொருவருக்கும் இருக்கும். இந்த திருமணம் கொஞ்சம் நகைப்பை வரவழைக்கும்.....

******************************************************************************


நினைவுகள்

ஊர் சுற்றுவது எப்போதும் பிடித்த ஒன்று. கோவையிலிருந்து மதுரை செல்வதை நினைத்தாலே ஒரு பதட்டம் எப்போதும் ஒட்டிக்கொள்ளும். மதுரையைக் கடப்பது என்பது ஏதோ கடல் கடப்பது போன்ற மாயை எப்போதும் இருக்கும் உணர்வு. ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவம் நிச்சயம் உங்களுக்கு காத்திருக்கும் என்பது மட்டும் திண்ணம். ஆரப்பாளையத்தில்  இறங்கும் போது எதிர் கொள்ளும் ஆட்டோக்காரர்களும் இந்த உணர்வுக்கு முக்கிய காரணம். இவை எல்லாவற்றையும் தாண்டி மிக நுண்ணிய உணர்வாக அந்தக் காலை இரைச்சலும் மல்லிகைப் பூ வாசமும், வித விதமான குரல்களும் கோவையின் காலைப் பொழுதுகளில் கேட்டது இல்லை. கோவை எப்போதும் அமைதிப் பூங்காவாகவே எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் மதுரையின் பிம்பம் அப்படியானதாக இருந்ததில்லை. சினிமாக்களால் மதுரை பிம்பம் கட்டமைக்கப் பட்டதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 80களின் தொடக்கத்தில் செல்லூர் மதுரை ஐயா வீட்டிற்கு போகும் போதும்,  மதுரை அப்பாவை பார்க்கப் போகும் போதும் தான் மதுரை எனக்கு அறிமுகம். மதுரை என் பால்ய காலம் தொட்டு கல்லூரி படிப்பு வரை எனக்கு அறிமுகமான நகரம் தான் என்றாலும் மதுரையின் காலை வேளைகள் சற்று பயம் கலந்த ஆச்சர்யம் நிறைந்தவையாகவே எனக்கு தோன்றுகிறது. என் ஊருக்கு அருகில் இருக்கும் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய நகரங்களை விட மதுரை தான் நான் அதிகம் வசித்த அல்லது மனதுக்கு நெருக்கமான நகரம் என்று சொல்லலாம். மதுரை எப்போதும் என்னை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒன்று, சிறுவயதில் என் மதுரை ஐயா, எனக்காக எப்போதும் செய்து தரும் விளையாட்டுப் பொருட்கள் மிகவும் வசீகரமானவை. எப்போதும் ஒரு ஆச்சர்யம் (surprise) ஒளித்து வைத்திருப்பார். அவரை கண்டாலே எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். எப்போதும் கோபமாகவே இருப்பார். ஆனால் எனக்கு அப்படி இல்லை. அவரின் கோபத்தை நான் நகலெடுக்க நினைத்து என் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு அலைந்த நாட்கள் எல்லாம் உண்டு. என்ன தான் நாம அப்படி நினைச்சாலும் நாம அதுக்கெல்லாம் லாயக்கு படாத ஆளு தான். மற்றொன்று, மதுரை அப்பா ( என் தந்தையின் அண்ணன், பெரியப்பா என்று நாங்கள் அழைப்பதில்லை). வளர வளர மதுரையின் பிணைப்பு அதிகம் தான் ஆகியது. பள்ளி மேல்நிலை இறுதியாண்டு முடித்துவிட்டு அம்மன் சன்னதியில் தங்கியிருந்த நினைவுகள் எப்போதும் பசுமையானவை, நிறைந்த அனுபவச் செறிவு மிக்கவை. மதுரையில் எல்லாமே இருக்கும், கிடைக்கும், தமிழ் தொடங்கி ஜிகர்தண்டா வரை. ஒவ்வொரு நிமிடமும் உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும். என்னதான் என் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகள் நிறைந்த அல்லது நடந்த ஊர் கோவை என்றாலும், என் நகரம் என்றவுடன் மதுரையின் பிம்பம் தான் முதலில் வருகிறது. அதை கவனமாக ஒதுக்கி விட்டுதான் கோயம்புத்தூர் என்று பதில் சொல்ல விழைகிறேன். நாங்க "மதுரக் காரைங்கடி..!!!" என்பதில் கர்வம் தாண்டி ஒரு குதூகலம் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இராமநாதபுரம் வரை செல்லும் ஆம்னி பஸ் வந்தவுடன் ஒரு நிம்மதி தூக்கத்துடன் சிவகங்கை வந்து இறங்குவது சுகமாக இருந்தது. பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் போதும் ஊர் போய் சேரும் வரை கூட ஒரு பதட்டம் இருக்கும் அது பஸ்ஸில் செல்வதாக இருந்தாலும் சரி காரில் செல்வதாக இருந்தாலும் சரி. ஆனால் அவை எல்லாம் எவ்வளவு சுகமான பயணங்கள் என்பது இப்போது தோன்றுகிறது. எல்லாப் பயணங்களும் ஏதாவது ஒரு அனுபவம் தருபவை தான். 

22 February 2012

எதைப் பற்றி எழுதுவது


±ØÐÅÐ ±ýÀÐ ±ùÅÇ× ºí¸¼Á¡É §Å¨Ä ±ýÀÐ ±Ø¾ ¯ð¸¡Õõ §À¡Ð ¾¡ý ¦¾¡¢¸¢ÈÐ. ±¨¾ô ÀüÈ¢ ±ØÐÅÐ ±ý¸¢È ±ñ½õ §ÅÚ þó¾ ÀÂò¾¢üÌ ¸¡Ã½õ. º¢ò¾¢ÃÓõ ¨¸ôÀÆì¸õ ±ýÀ¨¾ ¿õÀ¢ ±Ø¾ ¬ÃõÀ¢òРŢð§¼ý ±ýÚ ¾¡ý ¦º¡øħÅñÎõ. ¬ÃõÀò¾¢Ä¢ÕóÐ þÐ §À¡ýÈ §Å¨Ä ¦ºöÐ À¢Èó¾ ÌÆó¨¾ ¸ÅÉõ ®÷ôÀÐ §À¡Ä ¸ÅÉ¢ì¸À¼§ÅñÎõ ±ýÀÐ×õ þ¾¢ø ´ýÚ. ±Ð ±ôÀʧ¡ ±Ø¾ ¦¾¡¼í¸¢Â¡îÍ. ¸¼ó¾ ÀÄ ÅÕºÁ¡§Å Áñ¨¼ìÌûÇ þÕó¾ «¡¢ôÒõ ´Õ ¸¡Ã½õ. À¡÷ô§À¡õ þÐ ±ùÅÇ× àÃõ §À¡Ìõ ±ýÚ......


20 February 2012

ஆதி பக(ல)வன் முதற்றே உலகு

பகலவன் தான் நம் முதல் என்பதில் எந்த ஐயமும் யாருக்கும் இருக்க 
வாய்ப்பில்லை.....திருவள்ளுவர் எந்த எண்ணத்தில்  குறளை இந்த வரிகளுடன் தொடங்கினாரோ தெரியாது, என் வாழ்வின் ஆதாரம் பகலவன் தான். எப்போதும் விஞ்ஞானம் கற்பனைகளின் பின்னால் சென்றுதான் தனக்கான் இருப்பை காட்டிக் கொண்டுள்ளது.