Pages

3 March 2012

கற்றது கைமண் அளவு- 03/03/2012 அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வசித்த மேரி கோல்வின் (Marie Colvin) என்ற ஊடகவியலாளர், சிரியாவின் ஹோம்ஸ் நகரில், பாபா அமர் பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பலியானார். ஈழப்போரில் தனது இடது கண்ணை இழந்த இவர்  'சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றியவர். ஈழப்போரில் நடந்த கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்களில் மிக முக்கியமானவர். அவரைப் பற்றி விகடன் சொன்னது,

"போர்ச் செய்திகளை உலகம் எப்போதுமே எண்ணிக்கைகளாலேயே அளக்கும். ஊடகங்களும் அப்படித்தான். மேரி கோல்வின் வலிகளால் அளந்தவர். அவருடைய கடைசிக் கட்டுரையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ராக்கெட் தாக்குதலால் வீட்டையும் கணவனை யும் இழந்து ஒரு சின்ன கொட்டகைக்குள் இரண்டு சின்ன குழந்தைகளுடன் பதுங்கி இருக்கும் நூர்; ரொட்டி வாங்கி வருவதற்குள் மனைவி, வளர்ப்பு மகன், இரு சகோதரிகளைக் குண்டுகளுக்குப் பறிகொடுத்து நிற்கும் அபு; வெளியே சென்ற கணவன் திரும்பாத சூழலில், தாய்ப்பாலும் வற்றிவிட்ட நிலையில் பிறந்த குழந்தைக்குக் கைவசம் உள்ள சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்துப் புகட்டும் ஃபாத்திமா... சிரியர்களின் துயரமும் உலகின் புறக்கணிப்பும் ஒருசேர முகத்தில் அறைகின்றன.

சிரியாவில் 42 ஆண்டு கால பஷர் அல் அசாத் குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, கடந்த 11 மாதங்களாக சிரிய மக்கள் போராடிவருகிறார்கள். உள்ளூர் ஊடகங்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ள நிலை யில், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்திருக்கிறது பஷர் அல் அசாத் அரசு. மேரி கோல்வின் கடத்தல்காரர்கள் பயணிக்கும் வழிகளில் பயணித்து சிரியா சென்றார். இரவில்தான் பயணிக்க வேண்டி இருக்கும். இருபுறமும் தாக்குதல்கள் நடக்கும். விளக்குகளை அணைத்துவிட்டு இருளில் காரை ஓட்டிச் செல்ல வேண்டும். மேரி கோல்வின் எல்லாவற்றுக்கும் பழகியிருந்தார்.

2001-ல் ஈழத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் செய்தி சேகரிக்கச் சென்றபோது, இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் தன்னுடைய ஒரு கண்ணை இழந்தார் மேரி கோல்வின். ''எல்லோரும் இனி அவள் அவ்வளவுதான் என்று சொன்னார்கள். ஆனால், மேரி அதற்குப் பிறகுதான் முன்னைவிடவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினாள்!'' என்கிறார் அவருடைய சகா ஒருவர்.

மேரி கோல்வினின் மரணத்தால் தமிழர்களுக்கு கூடுதல் இழப்புகள் ஏதேனும் உண்டா? உண்டு. ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், குறிப்பாக மே 13 முதல் 17 வரை யிலான ஐந்து நாட்களில் விடுதலைப் புலி களுடன் சர்வதேசம் நடத்திய ரகசிய பேரத் துக்கும் இழைத்த துரோகத்துக்கும் முக்கிய மான மௌன சாட்சி மேரி கோல்வின். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான நடேசனும் அமைதிப் பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவனும் புலிகள் சரணடைவது தொடர்பாகப் பேச்சுகளை முன்னெடுத்தது மேரி கோல்வின் மூலம்தான். ''வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தால் இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்த மாட்டார்கள்'' என்ற ஐ.நா. சபையின் உத்தரவாதம் விஜய் நம்பியார் வாயிலாகப் புலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதும் மேரி கோல்வின் மூலம்தான். ஈழப் போரின் கடைசி நாட்களில் என்ன நடந்தது என்ற மர்மம் தெரிந்த எல்லோருமே அன்றைக்கு ராஜ தந்திரத் துறையில் இருந்தவர்கள். ஒருபோதும் உண்மையை வெளியேவிடும் வாய்ப்பு இல்லா தவர்கள். விதிவிலக்காக மேரி கோல்வின் இருந்தார். இப்போது அவருடைய மரணம் ஈழ மர்மத்தை மேலும் இருட்டாக்கி இருக்கிறது! "

__________________________________________________________________________________

மனித உரிமை மீறல் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதி பேசியிருப்பது என்னவோ எதிர்பார்த்தது தான். அது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படிக்க‌
http://tamil.oneindia.in/news/2012/03/03/tamilnadu-seeman-blasts-india-trying-save-lanka-aid0136.html
------------------------------------------------------------------------------------------------------------
எல்லாவற்றிலும் ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது, அதைப் பிரித்தறியும் முப்பெட்டகம் தான் ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் காட்டுகிறது. சமன்பாடுகள் அழகானவையா என்ன ? சமன்பாடுகள் இல்லாமல் நாகரீகம், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம்  இன்று எதுவும் இல்லை. வாழ்க்கையே ஒரு சமன்பாடு தான். அதை சரியாக சமன்படுத்தக் கற்றுக்கொண்டால் எந்த ஒரு தகராறும் இல்லை. இந்த documentary பாருங்கள் நிச்சயம் இந்தச் சமன்பாடுகளை நேசிப்பீர்கள்.


________________________________________________________________________________
நம்மை ஏமாற்றுபவரை விட நாம் ஏறமாற்ற அனுமதிப்பது தான் மிக பெரிய குற்றம். நமது சாட்டிலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை காரணம் 95% சினிமா சார்பு மற்றும் நம் அறிவை எந்த விதத்திலும் வளரவிடாமல் பார்த்துக்கொள்வது போன்றவை.  இந்த வரிசையில் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு விளையாட்டுப் போட்டி.... கண்டிப்பாக நீங்கள் இடைவிடாமல் சிரிப்பீர்கள் என்பது மட்டும் உறுதி. பொதுவாகவே நடிகர்கள் எது செய்தாலும் பிடிக்கும் நமக்கு. இப்போ உங்களின் அறிவு இவ்வளவு தான் என்று வந்திருக்கிறார்கள்.  இதுக்கும் வழக்கம் போல நாம் சிரிப்போம். பங்கு பெற்ற ஒருவர் I.A.S தயார் செய்வதாக கூறினார், அவருக்கு இந்த வருட சாகித்திய அகாடமி வாங்கியவர் பெயர் கூட தெரியவில்லை.  அந்த கேள்வி மட்டும் தான் உருப்படியானது அந்த மொத்த நிகழ்ச்சியிலும்.
இதற்குப் பின் மிகப்பெரிய கொள்ளை வேறு இருப்பதாக படித்தேன். இதைச் சுட்டி படித்து பாருங்கள்....

http://tamil.oneindia.in/movies/news/2012/02/corporates-loot-public-money-through-game-show-
aid0136.html

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மறுபடியும் ஒரு சினிமா செய்திதான். தெலுங்கில் சமீபத்தில் வெளியான இரு தமிழ் மொழி மாற்றுப் படங்கள், அந்த மொழி மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறாமல் போய்விட்டன என்பது தான் அது. தமிழ் கலாச்சாரம் உள்ள கதைகளான அரவான் மற்றும் பருத்திவீரன் திரைப்படங்கள்  ஏக வீரா மற்றும் மல்லிகாடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி உள்ளன. ஆங்கில மொழி மாற்றுத் தமிழ்ப் படங்கள் போல இருக்கும் போல இருக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்றவார ஆஸ்கார் வாங்கிய Artist பார்க்க நேர்ந்தது. மிகவும் அருமையான திரைப்படம். குறிப்பாக இசை மிக நேர்த்தி, அது ஒரு கதையை தனியாக சொன்னது போல இருந்தது. அதைப் பற்றிய பதிவு விரைவில் வெளியிடுகிறேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@1 comment:

  1. I read also about marie colvin in vikatan. good.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete