Pages

22 March 2012

சிக்கி முக்கி நெருப்பே - (1)

  

       'எரிபொருள்' இந்த வார்த்தை இந்த உலகத்தை, சிந்தனையை, நாகரீகங்களை, மாற்றிப் போட்ட வார்த்தை. மனித இனம் தோன்றிய போது விலங்குகள் போலத்தான் சுற்றித் திரிந்தான், நெருப்பின் பயன் தெரியும் வரை. முதலில் நெருப்பைக் கண்டு பயந்தவன், பின்னர் தான் நெருப்பைக் கொண்டு தன்னை காக்கவும், எதிரையை பயம் கொள்ளச் செய்யவும், தனக்கான இரையை வாட்டவும் என்று பல்வேறு பயன்பாட்டைக் கொண்டு நெருப்பை மெல்லத் தன்வசப்படுத்திக் கொண்டான். பல நூற்றாண்டுகள் எரிபொருள் நெருப்பும் மரமும் மட்டும் தான். நெருப்பும் மரமும் மழை, குளிர் காலங்களில் தன்னைக் காக்க வேகம் காட்டவில்லை. நெருப்பை உண்டாக்க செய்த முயற்சியை விட அதனைத் தக்கவைக்க அதிகம் மெனக்கட வேண்டியிருந்தது. மனித இனக் குழுக்கள் மெல்லத் தன் அதிகாரத்தைக் கிளை பரப்பத் தொடங்கவும் வியாபாரங்களும் களைகட்டத் தொடங்கியது. புதிய எரிபொருளுக்கான சந்தையின் மதிப்பு பல்வேறு வடிவங்களில் கண்சிமிட்ட புதிய எரிபொருளுக்கான தேடல் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டது.  எப்போது அறிவியல் என்னும் விஞ்ஞானம் தன்னை முழுவீச்சுடன் வெளிக்காட்ட ஆரம்பித்ததோ அப்போதே பயன்பாடு என்கிற பதம் மாறி அதிகாரம் செய்யும் ஆணவ மனோபாவம் ஆட்சி செய்யத் தொடங்கி விட்டது.

  

  

         நீராவியின் உபயோகம் கண்டுபிடிக்கப் பட்டதும், தொழிற்புரட்சி எட்டுக்கால் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியது. புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நீராவியின் துணையுடன் முளைத்தன. அதே நேரம் எரிக்கப்படும் மூலப்பொருளின் தேவையும் அதிகமாகிக் கொண்டே போனது. இது மரத்திலிருந்து நிலக்கரி என்கிற அளவில் வளர்ச்சியடைந்ததும் எரிக்கப்படும் பொருட்களின் தேவையும் அதிகரித்தது. அதனைச் சார்ந்த அரசியலும் அதிகாரமும் முன்னெடுக்க ஆரம்பித்தன. யார் எரிபொருளைச் சரியான வழியில் பயன்படுத்தி அதனைக் கையகப்படுத்துகிறார்களோ அவர்களே உலகின் அதிகார மையமாக கோலோச்சி இருக்கிறார்கள். தங்களின் அதிகார மையங்கள் தகர்ந்து போகும் நிலையை எப்பாடு பட்டாவது தக்க வைக்கப் போராடி இருக்கிறார்கள், தொடர்ந்து போராடிக் கொண்டும் வருகிறார்கள்.

 
 இந்த எரிபொருளின் தேவை என்பது பெரிய இயந்திரங்களையும், ரயில் வண்டிகளையும் தாண்டி பெரிய அரண்மனைகளையும் வீடுகளையும் தெருக்களையும் எரியூட்ட வேண்டும் என்கிற போது புதிய வகை எரிபொருள் தேவையாக இருந்தது. இந்த எரிபொருளின் வரலாறும் அதனைச் சார்ந்த அரசியலும் அதிகாரமும் தான் இந்தப் பதிவின் கருப்பொருட்கள். இவற்றைப் பற்றிய விரிவான தகவல்களுடன் வருவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். முடிந்தவரை விளக்கமான தெளிவான வரலாறுடனும் தகவல்களும் இதில் தருகிறேன்.....தொடர்வோம் பயணத்தை.





1 comment:

  1. எரி பொருளும் அதன் விரிவும். தொடருங்கள். வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete