Pages

16 March 2012

ஆறு வார்த்தைக் கதைகள்



பல நேரங்களில் சிலரின் ஒரு சில வார்த்தைகள் ஒரு கதை சொல்லிவிடும். ஆறு வார்த்தைக் கதைகள் பற்றி ஒரு முறை சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதுமில் எழுதியிருந்தார். ஆங்கிலத்தில் இவை மிகப் பிரபலம். காதல், குற்றம், நகைச்சுவை,  என்று கிட்டத்தட்ட எல்லா வகைக் கதைகளும் உண்டு. ஆனால், தமிழில் இது போன்ற முயற்சிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் ஒரு சில ஆறு வார்த்தைக் கதை சொல்கிறேன். இன்னும் இருந்தால் பதிவிடுங்கள் நண்பர்களே. 

1. சரி இப்போ தூங்கு. நாளைக்கு கதை சொல்லுறேன்.

2. ஒரு ஊருல நரி. அதோட கதை சரி.

3. எழுந்திரு; படம் முடிஞ்சிருச்சு. கடைசி பஸ்ஸு போயிரும்.

4. நடப்பதெல்லாம் கனவு இல்லை. காண்பதெல்லாம் நிஜம் இல்லை.

5. நர்சு வந்து சொன்னாள்; உங்க கணவருக்கு எயிட்ஸ்.

6. ஒரு முத்தம் கொடு, நாளை உனக்குத் திருமணம்.

7. கதவைத் திறந்து பார்த்தாள் "இன்னைக்கும் அவரு வரல"

8. வயசுக்கு வந்துட்டா ! மாமா கிட்ட சொல்லிட்டு வந்துரு.

9. கிளம்பு அவரு வர நேரமாயிருச்சு, பாத்தா வெட்டிருவாரு.

10. சரி என்னத்த சொல்ல, எல்லாம் என் விதி.

எல்லா வகையிலும் முயன்றிருக்கிறேன். கருத்துக்களைச் சொல்லுங்கள் நண்பர்களே.




No comments:

Post a Comment